Monday, December 17, 2012
நான் பேச வந்தேன்....!
உபயோகமான மருத்துவக் குறிப்புகள்
பப்பாளிப் பழத்தின் பயன்கள்
பப்பாளிப்பழத்தில் வைட்டமின் A அதிகம் உள்ளது. இதனால், முதுகு வலி போகும் . டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பு நோய் குணமாகும்.
ரத்த சோகை நோய்க்கு
அருகம்புல், கீழாநெல்லி மற்றும் கரிசலாங்கண்ணி கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை குணமாகும்.
வாயுக் கோளாறுகளுக்கு
புதினா இஞ்சி நன்மை பயக்கும். மாவுப்போருள்கள், சரியாக வேகாத உணவு, கடலைப்பருப்பில் செய்த பொருள், புளிப்புதயிர், பட்டாணி, மசாலா, எண்ணையில் பொரித்தது ஆகியவைவாயுக் கோளாறுகளை அதிகரிக்கும்.
5-6 பூண்டை உரித்து தட்டி தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த பூண்டைத்தின்று, அந்த நீரையும் குடித்தால்
வாயுத்தொல்லை அகலும்.
பெருங்காயம், சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி, இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட வாயுக் கோளாறு நீங்கும்.
உடல் உஷ்ணத்திற்கு
உடல் உஷ்ணம் குறைய பூஷணி, வாழைத்தண்டு அல்லது காரட் சாறு அருந்தவும்.
சந்தனம் பசும்பாலில் அரைத்து ஒரு புளியங்கொட்டை அளவு சாப்பிட உடல் உஷ்ணம் குறையும்.
உடல் உஷ்ணத்திற்கு பார்லியும் நல்லது.
முள்ளங்கியும் உடல் சூட்டிற்கு நல்லது.
வெங்காயம், மோர், நீர் ஆகாரம் நல்லது.
உடல் பருக்க
ஒல்லியானவர்கள் குண்டாக , உளுந்தை வேக வைத்து களியாகவோ அல்லது எள்ளுருண்டை மற்றும் பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடவும்.
தொண்டை வலிக்கு
திப்பிலி, துளசி , புதினா , தூதுவளை ஆகியவை நல்லது.
இருதய நோய்க்கு
ஆவாரம்பூ, ரோஜாப்பூ , செம்பருத்திப்பூ மற்றும் தாமரைப்பூ ஆகியவற்றை சாப்பிட வேண்டும் . இவைகள் , தற்போது ஷர்பத்தாக கிடைக்கின்றன.
பேரிச்சம்பழம்
பசி இல்லாதவர்களுக்கு
புதினா, வெற்றிலை, சீரகம் மற்றும் பிரண்டைத்தண்டு ஆகியவற்றைக்கொடுக்கவும்.
வறட்டு இருமலுக்கு
தேனுடன் எலுமிச்சம்பழச்சாறு மற்றும் சுட்ட வெங்காயம் ஆகியவற்றைக்கொடுக்கவும்.
நரம்புத்தளர்ச்சிக்கு
அன்னாசிப்பழம் அரைக்கீரை, காரட் மற்றும் பச்சைக் காய்கறிகள் நல்லது.
தலை சுற்றல்
தலை சுற்றலுக்கு சுக்கு காபி , கொத்துமல்லி காபி மற்றும் வேப்பிலை வேது பிடித்தல் ஆகியவை நல்லது.
கண்பார்வை அதிகரிக்க
வல்லாரை, கொத்துமல்லி, சீரகம், கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சாப்பிடவும்.
தூதுவேளைக்கீரை
இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.இஞ்சிச்சாறும் செறிமானத்திற்கு மிகவும் நல்லது.
நீர்க்கடுப்பிற்க்கு
வெங்காயத்தை பச்சையாக உண்ணலாம் .
நல்லெண்ணையில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து ஒரு கரண்டி சாப்பிட நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் அல்லது நீர்சுறுக்கு குணமாகும்.
பசியைத்தூண்ட
பசியைத்தூண்ட முள்ளங்கி சாப்பிடவும்.
விக்கல் நிற்க
சுக்கை தேனில் குழைத்து நாக்கில் தடவ விக்கல் குணமாகும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் விக்கல் குணமாகும்.
ஆஸ்த்மாவிற்கு
சித்த மருந்து
துளசி, வேம்பு, ஓமவல்லி இலை, வில்வ இலை ,கஸ்தூரி,கோரோஜனை ,சிற்றரத்தை , ஓமம், கடுக்காய் தோல், மிளகு, திப்பிலி மற்றும்ஆடாதோடை இலை ஆகியவற்றை கொடுக்கலாம். காற்றோட்டமுள்ள இடத்தில் இருக்க வேண்டும். தலையனையை உயரமாக வைத்துக்கொள்ளவும்.
மிதமான உணவு பொழுது சாய்வதற்குள் சாப்பிடவும். படுக்கை விரிப்புகளை அடிக்கடி மாற்றவும். தூசி , புகை ஆகாது. பூச்சிகொல்லி மருந்து, கொசு வத்தி , சாம்பிராணி புகை, மன உளைச்சல், குளிர் பானங்கள், புளிப்பு, எண்ணெய் , பால், முட்டை ஆகாது .
சளிக்கு
பூண்டு, இஞ்சி, மிளகு, சித்தரத்தை போட்டு பாலில் காய்ச்சிக் குடிக்க சளிக்கு நல்லது.
இஞ்சிச்சாறு, வெங்காயச்சாறு, எலுமிச்சைசாறு மூன்றையும் சம பங்கு கலந்து சாப்பிட சளி, இருமலுக்கு விடை கொடுக்கலாம்.
பசும்பாலைக் காய்ச்சி பணங்கள் கண்டு மற்றும் பத்து மிளகு போட்டு காய்ச்சி சாப்பிடவும். இது உஷ்ண இருமலுக்கு நல்லது.அதாவது, வறட்டு இருமலுக்கு நல்லது.
Subscribe to:
Posts (Atom)