உண்மையாகக் காதலிக்கும் ஆண்கள் தங்கள் காதலியை மறப்பதில்லை. மறப்பதும் மற்றவரை மணப்பதும் பெண்களுக்குக் கைவந்த கலை!. பெரும்பாலும் காதல் தோல்வியால் உயிர் நீப்பதும், தேவதாசாக மாறுவதும் ஆண்கள்தான். ஆண்கள் இதயத்தின் இந்தப்பிரிவு வலியை பெண்கள் உணர்வதில்லை!. இதோ உங்களுக்காக ஒரு உருக்கமான பாடல்... பாருங்கள் காதலி தன் கண் முன்னால் இருந்தும் தூரமாகக் காணும் காதலனின் வேதனையை...!. நடிகர் திலகம் சிவாஜியின் ..நடிப்பில்... டி .எம் . சௌந்தரராஜனின் அருமையான குரலில்...!.எங்கிருந்தோ வந்தாள் படத்தில் இருந்து.எம்.எஸ்.விஸ்வநாதனின் ..இசையில்.!
கண்ணன் பாட்டுகள் என்றுமே இனிமையானவை! அவற்றில் ஒன்றுதான் இந்தப்பாடல். லக்ஷ்மியின் கண்ணழகும், கண்ணால் பேசும் மொழியும் இந்தப்பாடலுக்கு மேலும் மெருகு சேர்க்கிறது. இனிமையான பாடல், இறுதியில் கொஞ்சம் காமெடி. கேட்டுதான் பாருங்களேன்!.
எனக்குப்பிடித்த பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதோ ஒரு பழைய பாடல். உணர்ச்சிகளின் வெளிப்பாடு, காதலைச் சொல்ல வரும்போது தயக்கம். என்னே ஒரு பாடல் வரிகள். அதற்கு ஏற்றவாறு ஒரு மெல்லிய இசை. நடித்தவர்களும் அதற்கு அழகும், மெருகும் சேர்க்கத்தான் செய்து இருக்கிறார்கள். இனிமையான, கேட்கக் கேட்க மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இதோ உங்களுக்காக!