Showing posts with label VAASTHU. Show all posts
Showing posts with label VAASTHU. Show all posts

Sunday, November 10, 2013

ஆபரணங்களை இரும்பு அலமாரியில் வைக்கலாமா?
பணம், மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை மரப்பெட்டியில் வைத்தால் மிகுந்த யோகம் தரும். மரம் வளரும் ஆற்றலைப் பெற்றது!. ஆகவே, அதில் வைக்கும் பொருள்களும் மேலும், மேலும் வளர வாய்ப்பு உண்டு. வைக்கும் நகைகளைப்போல பல மடங்கு நகை வாங்கும் வாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் மரப்பெட்டியில் வைப்பதால் கிடைக்கும் என்பார்கள். முற்காலத்தில் மரப்பெட்டகத்தைத்தான் உபயோகித்தார்கள்!. ஆகவே பணம், மற்றும் ஆபரணங்களை மரப்பெட்டகத்தில் வைத்து , அதை ஸ்டீல் பீரோவில் வைப்பதன் மூலம் நல்ல பலன் கிட்டும்!.
மேஜை விரிப்புகள்!
சாப்பிடும் மேஜையின் மீது விரிக்கும் மேஜை விரிப்புகளில் விலங்குகளின் படங்களைத் தவிர்ப்பது நல்லது. தங்கம் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இடம் பெற்ற விரிப்புகள், அதில் பல விதமான கனி வகைகள் அமைந்த மாதிரி இருந்தால் அதிர்ஷ்டம் கிட்டும். கனிகளைப் பார்ப்பதால் கனிவான வாழ்க்கையும், பற்றாக்குறை இல்லாத உணவும் கிடைக்க வழி பிறக்கும் (நன்றி: தமிழ் மாத ஜோதிடம்).
வாஸ்துப்படி வீட்டு வாசல் அமைப்பது எப்படி?
வீட்டின் வாசற்படி அந்த வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் குடும்பத்தலைவரின் ஜாதகத்திற்கு ஏற்றவாறு அமைந்தால்தான் ஏற்றமான, வளமான வாழ்வு அமைந்து, வருமானமும் வந்து சேரும்.
கட்டிடத்தின் நிலை வைக்கும் நேரம் மிக முக்கியமானது. நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம், லக்னம் மற்றும் அரசு பட்சியும், ஹோரையும் சிறப்பாக அமைந்தால், வீடு கட்டியது முதல் வியக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்படும்.
கட்டப்போகும் வீட்டின் நீளத்தை அளந்து அதை 9 பங்கு செய்து வலது புறத்தில் 5 பங்கு ஒதுக்கி நடுப்பங்கில் வாசல் அமைத்தால் அந்த வீட்டில் அதிக சுப காரியங்கள் நடைபெறும் என்று கூறுவார்கள்.
அதைக் குறிக்கும் பழம் பாடல்:
" வீட்டினளவை விளங் கொன்பான் கூறு செய்து
நீட்டியளந்த நிலைக்கோல்- கூட்டிடுவாய்!
வாமத்தே யைத்தும், வலத்தே யொரு மூன்றாய், 
சோமத்தே வாசலிடச் செப்பு என்பதாகும்."
(நன்றி: தமிழ் மாத ஜோதிடம்).