Showing posts with label ASTROLOGY. Show all posts
Showing posts with label ASTROLOGY. Show all posts

Friday, September 5, 2014

தடைப்பட்ட திருமணம் நிறைவேற !


தடைப்பட்ட திருமணம் நிறைவேற !

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் பட்டமங்கலம் என்ற சிற்றூரில் கிழக்கு நோக்கி திசை மாறி அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று காலை 108 முறை அவரை வளம் வந்து அர்ச்சனை அபிஷேகம் செய்ய நீண்ட நாள் தடைப்பட்ட திருமணங்கள் கூடி இனிது நிறைவேறும். 51  முறை அவரை வலம் வர நியாயமான கோரிக்கைகள், நினைத்த காரியங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்.


( நன்றி: கே.எஸ்.சேவுகமூர்த்தி, ஜோதிட அரசு)

Sunday, November 10, 2013

உள்ளூரில் திருமணம் அமையும் வாய்ப்பு!
ஜாதகத்தில் ஏழாமிடம் ஸ்திரமான ராசியாக இருந்து, அதில் ஸ்திர கிரகங்கள் வீற்றிருந்தால் உள்ளூரிலேயே வரன் அமையும்!

கட்டளையிடும் யோகம் யாருக்கு அமையும்!
சந்திரன் முழு மதியாக மீன ராசியில் இருந்து சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட வேளையில் பிரிந்த ஜாதகருக்கு அரசியலில் செல்வாக்கும், உயர் பதவியும், இவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேலையாட்களும் அமைந்து அரசனைப் போல வாழவார்கள்.

ஆவணி மாதம், சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது ஞாயிற்றுக்கிழமை அன்று சூரியனுக்குப் பொங்கல் இட்டு வழிபாடு செய்தால் மகிழ்ச்சி பொங்கும். செல்வம், செல்வாக்கு பெருகும். எல்லா ஞாயிற்றுக் கிழமையும் முடியா விட்டாலும், கடைசி ஞாயிறு அன்று விரதமிருந்து பொங்கல் இடுவது நல்லது.
சூரிய கிரணங்களை வழிபட்டால் காரியங்கள் வெற்றிபெறும்.

ஆவணி மாதம்!
பிட்டுக்கு மண் சுமந்து பரமன் பிரம்படி பட்ட திருவிளையாடல் நடந்த மாதம் ஆவணி மாதம். இந்த தினம் மதுரை ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். அதில் கலந்து கொள்பவர்கள் சகல பாக்கியங்களையும் பெறுவார்கள். 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கீழச்சீவல்பட்டி ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அன்றைய தினம் சிவபெருமான் தலையில் வெள்ளிக்கூடயையும், மண் வெட்டியையும் வைத்து புட்டுக்கு மண் சுமந்து வருவது போல நகரத்தார் பெருமக்கள் மிகச் சிறப்பாக விழாக் கொண்டாடுகிறார்கள்.
 மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களும், ஆண்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு முறையாக இறைவனை வழிபாடு செய்தால் காலம் முழுவதும் காத்திருந்தும் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை தீரும். அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று ஆவணி மூலத்தன்று சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் தீர்ந்து கனிவான வாழ்க்கை அமையும்!.

மனக்குழப்பம் அகல!
ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து  அல்லது பகை கிரஹத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமைந்தவர்கள், பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, 'ஓம் சந்திராய நமஹ' என்று ஒன்பது முறை சொல்வது நல்லது. மேலும், சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு , தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிடச் சொல்வது நல்லது. திங்கட்கிழமை தோரும் செய்யலாம்!.

கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் என்னில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம். இதனால் , சந்திர பகவான் அருளும், மனச்சாந்தியும் கிட்டும்!.