The homoeopathic medicine Cratageus Mother Tincture when taken regularly in the dose of 5- 20 drops in water, is supposed to have the action of dissolving the blocks in blood vessels. Similar effect can be also achieved by taking Allium sativum Q (Mother tincture) (which is nothing but Garlic) regularly. ( The first medicine given above should be taken after consulting a qualified Homoeopath).
Showing posts with label Health and Beauty. Show all posts
Showing posts with label Health and Beauty. Show all posts
Tuesday, August 9, 2016
ACUPRESSURE POINTS TO IMPROVE MEMORY!
ஞாபக சக்தி வளர அக்கு புள்ளிகள் !
இங்கு கொடுக்கப் பட்டுள்ள படத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள புள்ளிகள் , அதாவது முன் தலையில் தலை முடி எங்கு நெற்றியில் ஆரம்பிக்கிறதோ அந்த கோட்டிலிருந்து சுமார் இரண்டு இன்ச் பின்னால் ( சுக்லாம்பரதரம் குட்டிக் கொள்வோமே, அந்த இடத்தில் ) ஞாபக சக்தி வளர உதவும் புள்ளிகளாகும். இதை தினமும் விரல் நுனியாலோ, உருண்ட முனை கொண்ட பேனா அல்லது பென்சிலாலோ மூன்று நிமிடங்கள் அழுத்தி வந்தால் ஞாபக சக்தி வளரும்.
இங்கு கொடுக்கப் பட்டுள்ள படத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள புள்ளிகள் , அதாவது முன் தலையில் தலை முடி எங்கு நெற்றியில் ஆரம்பிக்கிறதோ அந்த கோட்டிலிருந்து சுமார் இரண்டு இன்ச் பின்னால் ( சுக்லாம்பரதரம் குட்டிக் கொள்வோமே, அந்த இடத்தில் ) ஞாபக சக்தி வளர உதவும் புள்ளிகளாகும். இதை தினமும் விரல் நுனியாலோ, உருண்ட முனை கொண்ட பேனா அல்லது பென்சிலாலோ மூன்று நிமிடங்கள் அழுத்தி வந்தால் ஞாபக சக்தி வளரும்.
( அந்தக் காலத்திலேயே இதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள்
சுக்லாம்பரதரம் சொல்லும் போது இந்த இடத்தில் குட்டிக் கொள்ளச் சொன்னார்கள் போலும் !).
Giving pressure for 3 minutes daily using finger tips or blunt end of a pen or pencil, at the points marked as white just behind the hairline on either side of the head, is supposed to improve memory. Readers may recollect and wonder the wisdom of our ancestors who knew about this and asked as to tap that portion of the head while chanting 'shuklaambaradharam vishnum' while praying in front of Lord Vinayaka).
Giving pressure for 3 minutes daily using finger tips or blunt end of a pen or pencil, at the points marked as white just behind the hairline on either side of the head, is supposed to improve memory. Readers may recollect and wonder the wisdom of our ancestors who knew about this and asked as to tap that portion of the head while chanting 'shuklaambaradharam vishnum' while praying in front of Lord Vinayaka).
Sunday, May 29, 2016
இஞ்சியின் பயன் !
பெரிய இஞ்சி ஒன்றை
எடுத்து அதைத் தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிப் போட்டு, மேல் ஈரம்
காய வெயிலில் வைத்து எடுத்து அவைகளை ஒரு சீசாவில் போட்டு, நல்ல தேனை அதன்
மேல்மட்டத்திற்கு மேல் நிற்கும்படி விட்டு, நன்றாகக் குலுக்கி வெயிலில் வைத்து
எடுத்து வைத்துக் கொண்டு, இதி 2-3 துண்டுகள் எடுத்து காலை, மாலை சாப்பிட்டால்,
பித்தம், வாய்வு சம்பந்தமான வ்ய்டாதிகள் குணமாகும். ஜீரண சக்தி மேம்படும்.
Sunday, January 10, 2016
பூசணி !
சாம்பல் பூசணியை தினசரி உபயோகிக்க
வயிற்றுப்புண், மலச்சிக்கல் ஆகியவை மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும்
இரத்தப்போக்கை குணமாக்கும். வலிப்பு நோய், மற்றும் மன நோய்களுக்கும் நல்லது.
இதன்
சாற்றை இரவில் சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்த நல்ல தூக்கம் வரும். தினசரி
இதன் சாற்றை 15 மில்லி அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
பூசணிச் சாறு
அல்லது கறி ஆகியவை உடலுக்கு டானிக்.
பூசணி
லேகியம் மற்றும் ரசாயனம், அஜீரணம், மலச்சிக்கல், மூல வியாதி, ஆஸ்த்மா, நீரிழிவு
நோய், இருமல் ஆகியவற்றைப் போக்கக் கூடியது ஆகும்.
இதன் இலைகளை கறி சமைத்துச் சாப்பிட மசக்கை வாந்தி நிற்கும்.
சிறுநீர் வெளியாவதில் சிரமம் இருப்பின்
சாம்பல் பூசணிச் சாறு எடுத்து அதனுடன் மண்டை வெல்லத்தூள் மற்றும் உப்பு கலந்து
அருந்த குணமாகும்.
பூசணிச் சாற்றை பாலுடன் கலந்து கொதிக்க வைத்து அருந்தினாலும்
நல்ல பலன் தரும்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக இரத்தப் போக்கு
ஏற்பட்டால் பூசணி இலைச் சாற்றுடன் சர்க்கரை கலந்து தினமும் அதிகாலை அருந்த
குணமாகும்.
சாம்பல் பூசணியின் தண்டைக் காய வைத்து
சாம்பலாக்கி கோமியத்துட கலந்து தோல் வியாதியின் மீது தடவ குணமாகும்.பாதத்தில்
வரும் புண்ணிற்கு நல்லது.
சாம்பல் பூசணித் துண்டு கொண்டு முகத்தில்
பல முறை தினசரி தடவி வர முகம் புதுப் பொலிவு பெரும். வடுக்கள் , கரும் புள்ளிகள்
மறையும்.
சாம்பல் பூசணிச் சாற்றுடன் கேரட் சாறு
கலந்து பருக இளமையில் முடி உதிர்தல் நின்று,கேசம் வலுப்பெறும்.
பூசணி இலைச் சாற்றை மோருடன் கலந்து அருந்த
வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி குணமாகும்.
பூசணி விதைகளைப் பொடித்து ஆறு கிராம் அளவு
,வெந்நீருடன் உட்கொள்ள குடல் புழுக்கள் மடியும். சர்க்கரையுடன் இதன் பொடியை
உட்கொள்ள நாடாப் புழுக்கள் அழியும்.
(நன்றி: யுனானி மருத்துவம்)
மருத்துவக் குறிப்புகள் !
மிளகின் மகத்துவம்
பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும்
உண்ணலாம் என்பது முன்னோர் வாக்கு. இது மிளகின் விஷம் முறிக்கும் தன்மையை
குறிக்கும்.
காய்கறி போன்றவற்றை நறுக்கும் போது கையை
நறுக்கிக் கொண்டால் காயத்தை குளிர்ந்த நீரில் சோப்பு போட்டு கழுவிய பிறகு
மிளகுத்தூளைத் தூவி லேசாக அழுத்தம் கொடுக்க ரத்தப் போக்கு நிற்கும். மேலும் வலி
நிவாரணத்திற்கும், புண் செப்டிக் ஆகாமல் இருக்க கிருமிநாசினியாக உதவும்.
மிளகை வாயில் அடக்கி மென்று உமிழ்நீரை
விழுங்கினால் வறட்டு இருமல் நிற்கும். தொண்டைப் புண் குணமாகும்.
சோயா
சோயா கொலஸ்டராலைக் குறைக்கிறது. இருதய நோயைத்
தடுக்கிறது. எலும்புத் தேய்மானத்தையும் சர்க்கரை வியாதியையும் கூடத் தடுக்கும்,
பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் அவதி குறையும். சோயா சாப்பிடுவதால்
மார்பகப் புற்று நோயிலிருந்தும் காக்கும் என்கின்றன ஆய்வுகள். தோல்
சுருக்கத்தையும் தடுத்து தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
சுக்கு
ஒரு துண்டு சுக்கை வாயில் அடக்கிக்
கொண்டால் குளிர் பறந்து விடும். இது இந்தப் பனிக்காலத்தில் அதிகாலையில் வேலைக்குச்
செல்வோருக்கு உதவும்.
ஜின்செங்-சீன
மூலிகை
ஜின்செங் நீண்ட நேரம் சோர்வில்லாமல்
விளையாடும் ஆற்றலைத் தருகிறது. அட்ரீனல் சுரப்பிக்கு புத்துயிரூட்டும். கூர்ந்து
கவனிக்கும் ஆற்றலையும், உறுதியான சிந்தனையையும் இது கொடுக்கும். அதிகமாக எடுத்துக்
கொள்ளக் கூடாது.
கேரட்
பெண்கள் தினசரி நான்கு கேரட் வீதம்
வாரத்திற்கு குறைந்தது ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர சினைப்பை புற்றுநோய் வரும்
வாய்ப்பு பாதியாகக் குறையும்.தக்காளி, ஆரஞ்சு, பேரிக்காய், சர்க்கரை வள்ளிக்
கிழங்கு, முலாம்பழம், பூசணி ஆகியவற்றில் பீட்டா கரோடின் அதிகம் உள்ளதால்
இவற்றிற்கும் அதே சக்தி உண்டு.
தெரியுமா?....ஒவ்வாமை
உண்டாக்கும் உணவுகளின் சேர்க்கை !
புளிப்பும் காரமும் நட்பு. காரம்
அதிகமாவதால் உண்டாகும் பாதிப்புக்கு மற்ற ஐந்து சுவைகள் உள்ள உணவை உட்கொண்டால்
சரியாகி விடும்.
தேனும், நெய்யும் சம அளவு சேர்ந்தால்
பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
புளிப்பு சுவையுள்ள எந்த கனியுடனும் பாலை
சேர்த்துக் கொள்ளக் கூடாது.
கேழ்வரகு, கொள்ளு மற்றும் காட்டுப் பயறு
வகைகளுடன் பால் சேர்க்ககூடாது.
முள்ளங்கி மற்றும் கீரை சாப்பிட்டவுடன்
பால் குடிக்கக் கூடாது.
முள்ளங்கியை உளுத்தம் பருப்போடும், கிச்சிலிப்
பழத்தை உளுத்தம் பருப்பு, வெள்ளம், பால் , தயிர் , நெய் ஆகியவற்றோடு உட்கொள்ளக்
கூடாது.
மணத்தக்காளியை மிளகு, திப்பிலி, தேன், வெல்லம்
இவற்றில் ஏதாவதொன்றுடன் சேர்த்து உபயோகிப்பது விஷமாகும்
மாம்பழம்
ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் ஒரு
நாளுக்குத் தேவையான பீட்டா கரோடீன் மற்றும் வைட்டமின் சி கிடைத்து விடுகிறது.
(நன்றி: யுனானி மருத்துவம்)
Sunday, December 27, 2015
ஹோமியோபதி மற்றும் உடல் நலக் குறிப்புகள் !
ஞாபக சக்திக்கு
பொட்டாஷியம் சத்து முக்கியம். இது வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது. வாழைப்பழம்
சாப்பிட்டால் ஞாபக சக்திக்கும், மலச்சிக்கல் இல்லாமல் இருக்கவும் உதவும்.
கலப்பட குங்குமம்
மற்றும் விபூதி ஆகியவற்றால் நெற்றியில் ஏற்பட்ட வடுவிற்கு காந்தரிஸ் ஆயின்ட்மென்ட்டும்,
உள்ளிற்கு சாப்பிட காஸ்டிகம் என்னும் ஹோமியோபதி மருந்துகளும் உபயோகித்தால், வடு
மறைந்து மீண்டும் தோல் பழைய நிலைமைக்கு மாறும். காந்தரிஸ் தீக்காயங்களுக்கும்
சிறந்த மருந்து.
முட்டையினால்
ஏற்படும் ஒவ்வாமைக்கு ஹோமியோபதி மருந்து : ஃ பெரம் மெட் (ferrum met).
தினமும் வாழை
இலையில் சாப்பிட்டால் இளமை நீடித்து நிலைக்கும்.
நாவற்பழம்,
பாகற்காய் மற்றும் வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய்
வராமல் தடுக்கலாம்.
உணவில் புளிக்கு
பதிலாக எலுமிச்சம்பழச் சாறு சேர்ப்பது நல்லது..
வறுத்த மாமிச உணவு
வகைகளை அதிகமாக உண்பவர்கள் அப்பழக்கத்திலிருந்து மாற ஹோமியோபதி மருந்து நைட்ரிக்
ஆசிட் (Nitric acid) துணை புரியும்.
மெட்ராஸ் ஐ குணமாக அற்புதமான ஹோமியோபதி மருந்து பெல்லடோனா
(Belladona).
கண்ணில்
அடிபட்டவுடன் வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த ஹோமியோபதி மருந்து : சிம்ஃபைடம்
(Symphytum).
தொடர்ந்து
தொலைகாட்சி பார்த்தல், கணினியில் வேலை செய்தல், சிறிய எழுத்துகளைப் படித்தல் ஆகியவற்றால்
ஏற்படும் கண் வலிக்கு (Eye strain) ரூடா (Ruta) எனும் ஹோமியோபதி மருந்து நல்லது.( ஹோமியோபதிச் சுடர் ).
Subscribe to:
Posts (Atom)