Friday, March 7, 2014

வெஜிடபிள் பிரியாணி!(VEGETABLE BIRIYANI RECIPE)

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி Basmati rice- 1 கப்(CUP)
நெய் அல்லது எண்ணெய் Ghee or oil- 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய காய்கறிகள் Cut vegetables- 2 கப் cups ( பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட், காலிபிளவர் ,பட்டாணி)( beans, potato,carrot, cauliflower, peas)
கொத்துமல்லி- 1 கைப்பிடி coriander leaves- 1 handful
புதினா mint leaves - 1 கைப்பிடி-1 hand ful
தக்காளிcut tomato- 1 நறுக்கியது - 1
வெங்காயம்cut onion- 1 நறுக்கியது - 1
பச்சை மிளகாய்Green chillies- 3 
எலுமிச்சம்பழம் Lemon-1
மஞ்சள் பொடி Turmeric powder- சிட்டிகை 1 pinch
மிளகாய்ப்பொடி Red chilli powder  - 1 டீஸ்பூன் tsp
கொத்துமல்லிப்போடி Coriander powder- 1 டீஸ்பூன் tsp
இஞ்சி-பூண்டு பேஸ்ட் Ginger -garlic paste- 2 டீஸ்பூன்(tsp)
பிரியாணி  மசாலாப் பொடி Biriyani masala- 1 டீஸ்பூன்tsp
ஏலக்காய் Cardamom- 3
கிராம்பு Cloves- 6
பட்டை Cinnamon- 1 இஞ்ச்( 1 inch stick)
பிரியாணி இலைBrinji leaf- 1
உப்பு Salt- இரண்டரை ஸ்பூன் 2 1/2 spoon .


செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை குக்கரில் போடும் முன்  தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு உபயோகிக்கவும். Soak basmati rice in water for 10 minutes just before cooking and drain the water and keep aside.

நறுக்கிய காலி ஃப்ளவரை கொதிக்கும் தண்ணீரில் மஞ்சள் பொடி, உப்பு போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து எடுத்து தண்ணீரை வடிகட்டி விட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். Put cut cauliflower florets in boiling water with turmeric powder and salt for 2-3 minutes. Drain the water and keep aside.

வாணலியில் நெய்/எண்ணெய் விட்டு சூடானவுடன் (அடுப்பை மறக்காமல் பற்றவைத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் சூடாகாது), ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இல்லை ஆகியவற்றைப்போட்டு வதக்கி, பின் நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும் . பின்னர் இஞ்சி-பூண்டு விழுது போட்டு வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய காய்கறிகள், உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, பிரியாணி  மசாலாப்பொடி ஆகியவற்றையும், கொத்துமல்லி, புதினா இலைகளையும் போட்டு வதக்கவும். Heat Ghee or oil in a pan and add whole spices and saute. Add cut onions and saute till brown. Add ginger garlic paste and saute for 1-2 minutes. Add slit green chillies and saute. Add cut tomatoes and saute again. Add cut vegetables, salt, turmeric powder, chilli powder, biriyani masala and coriander and mint leaves and saute for  few minutes.
பின்னர் ரைஸ் குக்கரில் 3 கப் தண்ணீர் சேர்த்து, அரிசி மற்றும் மேலே வதக்கிய அனைத்துப்பொருட்களையும் போட்டு, கலந்து, 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து, மூடி குக்கரை ஆன் செய்யவும். 20 நிமிடங்களில் பிரியாணி ரெடி!. மேலே ப்ரவுனாக வதக்கிய வெங்காயம், முந்திரி மற்றும் கொத்துமல்லி தழைகளைத் தூவிப் பரிமாறவும். வெங்காய ரைத்தா தொட்டுக்கொள்ளலாம்! Transfer the soaked rice to the rice cooker and add the above mixture to it. Add 1 tablespoon lemon juice and close the cooker with a lid and switch it on. Wait till it comes to keep warm. Then add fried (browned) onion(cut into long pieces) and coriander leaves for garnishing. This will go well with onion raitha or cucumber raitha or vegetable kuruma.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.