ஞாபக சக்திக்கு
பொட்டாஷியம் சத்து முக்கியம். இது வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது. வாழைப்பழம்
சாப்பிட்டால் ஞாபக சக்திக்கும், மலச்சிக்கல் இல்லாமல் இருக்கவும் உதவும்.
கலப்பட குங்குமம்
மற்றும் விபூதி ஆகியவற்றால் நெற்றியில் ஏற்பட்ட வடுவிற்கு காந்தரிஸ் ஆயின்ட்மென்ட்டும்,
உள்ளிற்கு சாப்பிட காஸ்டிகம் என்னும் ஹோமியோபதி மருந்துகளும் உபயோகித்தால், வடு
மறைந்து மீண்டும் தோல் பழைய நிலைமைக்கு மாறும். காந்தரிஸ் தீக்காயங்களுக்கும்
சிறந்த மருந்து.
முட்டையினால்
ஏற்படும் ஒவ்வாமைக்கு ஹோமியோபதி மருந்து : ஃ பெரம் மெட் (ferrum met).
தினமும் வாழை
இலையில் சாப்பிட்டால் இளமை நீடித்து நிலைக்கும்.
நாவற்பழம்,
பாகற்காய் மற்றும் வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய்
வராமல் தடுக்கலாம்.
உணவில் புளிக்கு
பதிலாக எலுமிச்சம்பழச் சாறு சேர்ப்பது நல்லது..
வறுத்த மாமிச உணவு
வகைகளை அதிகமாக உண்பவர்கள் அப்பழக்கத்திலிருந்து மாற ஹோமியோபதி மருந்து நைட்ரிக்
ஆசிட் (Nitric acid) துணை புரியும்.
மெட்ராஸ் ஐ குணமாக அற்புதமான ஹோமியோபதி மருந்து பெல்லடோனா
(Belladona).
கண்ணில்
அடிபட்டவுடன் வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த ஹோமியோபதி மருந்து : சிம்ஃபைடம்
(Symphytum).
தொடர்ந்து
தொலைகாட்சி பார்த்தல், கணினியில் வேலை செய்தல், சிறிய எழுத்துகளைப் படித்தல் ஆகியவற்றால்
ஏற்படும் கண் வலிக்கு (Eye strain) ரூடா (Ruta) எனும் ஹோமியோபதி மருந்து நல்லது.( ஹோமியோபதிச் சுடர் ).