Saturday, April 18, 2015

பனை நுங்கின் பயன்கள் ( இந்த கோடை காலத்திற்கு உகந்தது)…




பனை நுங்கை சாப்பிட்டால்


பனைமரத்திலிருந்து கிடைக்கும் பனை நுங்கு நன்மைகள் பல தரக் கூடியது ஆகும். 


பனை நுங்கிற்கு கொழுப்பைக்கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. உடல் எடையை குறைக்க நினைப் பவர்கள் பனை நுங்கை சாப்பிடலாம். பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச் சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே பனைநுங்கு மருந்தாக பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் கு்டித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.


இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மரு ந்தாகும். நுங்கில் காணப்படும் ஆந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.


(Content Courtesy: vidhai2virutcham).


 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.