Sunday, December 27, 2015

ஹோமியோபதி மற்றும் உடல் நலக் குறிப்புகள் !



ஞாபக சக்திக்கு பொட்டாஷியம் சத்து முக்கியம். இது வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது. வாழைப்பழம் சாப்பிட்டால் ஞாபக சக்திக்கும், மலச்சிக்கல் இல்லாமல் இருக்கவும் உதவும்.

கலப்பட குங்குமம் மற்றும் விபூதி ஆகியவற்றால் நெற்றியில் ஏற்பட்ட வடுவிற்கு காந்தரிஸ் ஆயின்ட்மென்ட்டும், உள்ளிற்கு சாப்பிட காஸ்டிகம் என்னும் ஹோமியோபதி மருந்துகளும் உபயோகித்தால், வடு மறைந்து மீண்டும் தோல் பழைய நிலைமைக்கு மாறும். காந்தரிஸ் தீக்காயங்களுக்கும் சிறந்த மருந்து.
முட்டையினால் ஏற்படும் ஒவ்வாமைக்கு ஹோமியோபதி மருந்து : ஃ பெரம் மெட் (ferrum met).
தினமும் வாழை இலையில் சாப்பிட்டால் இளமை நீடித்து நிலைக்கும்.
நாவற்பழம், பாகற்காய் மற்றும் வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
உணவில் புளிக்கு பதிலாக எலுமிச்சம்பழச் சாறு சேர்ப்பது நல்லது..
வறுத்த மாமிச உணவு வகைகளை அதிகமாக உண்பவர்கள் அப்பழக்கத்திலிருந்து மாற ஹோமியோபதி மருந்து நைட்ரிக் ஆசிட் (Nitric acid) துணை புரியும்.

மெட்ராஸ் ஐ  குணமாக அற்புதமான ஹோமியோபதி மருந்து பெல்லடோனா (Belladona).
கண்ணில் அடிபட்டவுடன் வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த ஹோமியோபதி மருந்து : சிம்ஃபைடம் (Symphytum).
தொடர்ந்து தொலைகாட்சி பார்த்தல், கணினியில் வேலை செய்தல், சிறிய எழுத்துகளைப் படித்தல் ஆகியவற்றால் ஏற்படும் கண் வலிக்கு (Eye strain) ரூடா (Ruta) எனும் ஹோமியோபதி மருந்து நல்லது.( ஹோமியோபதிச் சுடர் ).

Thursday, December 24, 2015

உணவு மற்றும் மூலிகை மருத்துவம்



துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபக சக்திக்குறைவு, ஆஸ்த்மா இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாற்றில் தேன் மற்றும் இஞ்சிச்சாறு கலந்து கொடுத்தால் சளி இருமல் ஆகியவை குணமாகும்.

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடம்பு வலியோ, செரிமானக் கோளாறோ ஏற்படாது. வயதானவர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு  பசியில்லை என்று சொன்னால் இஞ்சி சேர்த்துக் கொண்டால் நல்ல பசி எடுக்கும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை தினமும் சாப்பிட்டால் கல்லீரல் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.(ஹோமியோபதிச் சுடர் )

சாம்பார் மற்றும் ரசம்



சாம்பார் மற்றும் ரசத்தில் சேரும் புளியில் வைட்டமின் இ , வைட்டமின் சி,டார்டாரிக் அமிலம் ,கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. டார்டாரிக் அமிலம் உடலில் சேரும் அதிக அளவு மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. காய்ச்சல், ஜலதோஷம் முதலியன ஏற்பட்டால் மிளகு, பூண்டு, புளி சேர்ந்த ரசம் தவறாமல் ஒரு குவளையாவது அருந்தினால் நல்லது. தினமும் சாப்பாட்டில் சாம்பார் இடம் பெறின் நல்லது.

HOMEOPATHIC REMEDIES FOR COMMON AILMENTS



HOMOEOPATHIC REMEDIES FOR COMMON AILMENTS:
Itching due to Prickly heat: NAT MUR
Itching due to coconut oil:  SULPHUR
Hypertension due to mental stress, anxiety , tension etc: Aur met