Sunday, January 10, 2016

மருத்துவக் குறிப்புகள் !



மிளகின் மகத்துவம்

பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் உண்ணலாம் என்பது முன்னோர் வாக்கு. இது மிளகின் விஷம் முறிக்கும் தன்மையை குறிக்கும்.
காய்கறி போன்றவற்றை நறுக்கும் போது கையை நறுக்கிக் கொண்டால் காயத்தை குளிர்ந்த நீரில் சோப்பு போட்டு கழுவிய பிறகு மிளகுத்தூளைத் தூவி லேசாக அழுத்தம் கொடுக்க ரத்தப் போக்கு நிற்கும். மேலும் வலி நிவாரணத்திற்கும், புண் செப்டிக் ஆகாமல் இருக்க கிருமிநாசினியாக உதவும்.
மிளகை வாயில் அடக்கி மென்று உமிழ்நீரை விழுங்கினால் வறட்டு இருமல் நிற்கும். தொண்டைப் புண் குணமாகும்.




சோயா
சோயா கொலஸ்டராலைக் குறைக்கிறது. இருதய நோயைத் தடுக்கிறது. எலும்புத் தேய்மானத்தையும் சர்க்கரை வியாதியையும் கூடத் தடுக்கும், பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் அவதி குறையும். சோயா சாப்பிடுவதால் மார்பகப் புற்று நோயிலிருந்தும் காக்கும் என்கின்றன ஆய்வுகள். தோல் சுருக்கத்தையும் தடுத்து தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.




சுக்கு
ஒரு துண்டு சுக்கை வாயில் அடக்கிக் கொண்டால் குளிர் பறந்து விடும். இது இந்தப் பனிக்காலத்தில் அதிகாலையில் வேலைக்குச் செல்வோருக்கு உதவும்.



ஜின்செங்-சீன மூலிகை
ஜின்செங் நீண்ட நேரம் சோர்வில்லாமல் விளையாடும் ஆற்றலைத் தருகிறது. அட்ரீனல் சுரப்பிக்கு புத்துயிரூட்டும். கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும், உறுதியான சிந்தனையையும் இது கொடுக்கும். அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கேரட்
பெண்கள் தினசரி நான்கு கேரட் வீதம் வாரத்திற்கு குறைந்தது ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர சினைப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாகக் குறையும்.தக்காளி, ஆரஞ்சு, பேரிக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, முலாம்பழம், பூசணி ஆகியவற்றில் பீட்டா கரோடின் அதிகம் உள்ளதால் இவற்றிற்கும் அதே சக்தி உண்டு.


தெரியுமா?....ஒவ்வாமை உண்டாக்கும் உணவுகளின் சேர்க்கை !
புளிப்பும் காரமும் நட்பு. காரம் அதிகமாவதால் உண்டாகும் பாதிப்புக்கு மற்ற ஐந்து சுவைகள் உள்ள உணவை உட்கொண்டால் சரியாகி விடும்.
தேனும், நெய்யும் சம அளவு சேர்ந்தால் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
புளிப்பு சுவையுள்ள எந்த கனியுடனும் பாலை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
கேழ்வரகு, கொள்ளு மற்றும் காட்டுப் பயறு வகைகளுடன் பால் சேர்க்ககூடாது.
முள்ளங்கி மற்றும் கீரை சாப்பிட்டவுடன் பால் குடிக்கக் கூடாது.
முள்ளங்கியை உளுத்தம் பருப்போடும், கிச்சிலிப் பழத்தை உளுத்தம் பருப்பு, வெள்ளம், பால் , தயிர் , நெய் ஆகியவற்றோடு உட்கொள்ளக் கூடாது.
மணத்தக்காளியை மிளகு, திப்பிலி, தேன், வெல்லம் இவற்றில் ஏதாவதொன்றுடன் சேர்த்து உபயோகிப்பது விஷமாகும்


மாம்பழம்


ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் ஒரு நாளுக்குத் தேவையான பீட்டா கரோடீன் மற்றும் வைட்டமின் சி கிடைத்து விடுகிறது.
(நன்றி: யுனானி மருத்துவம்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.