Monday, November 3, 2014




பாஸ்பரஸ் சத்து



மூளை செய்லபாட்டை அதிகரிக்க, பாஸ்பரஸ் சத்து அதிக அளவில் உதவுகின்றன. பாதாம் பருப்பு, ஆக்ரூட் பருப்பை அத்திப்பழத்துடன் சேர்த்து உண்டால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
மூளைக்கு அதிகளவில் வேலைக் கொடுப்பவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி மிக அதிகமாக தேவைப்படும்.














சிறுநீரகக் கல்...
இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்-AV.

Friday, September 5, 2014

மார்பகம் இறுகி அளவுடன் இருக்க!

மார்பகம் இறுகி அளவுடன் இருக்க!







மார்பகம் பெரிதாகவும் தொய்ந்து போய் இருந்தால் ஜாதி மல்லிப்பூவை இரவில் அதன் மேல் கட்டி வர மார்பகம் சுருங்கும், இறுகும்.

பக்கோடா தயாரிக்கும் முறை

பக்கோடா தயாரிக்கும் முறை



கடலை மாவு- ஒரு கிலோ
கடலை எண்ணெய் – 250 மில்லி
வெங்காயம்-  200 கிராம்
பச்சை மிளகாய்- 25 கிராம்
கறிவேப்பிலை,கொத்துமல்லி- தேவையான அளவு
சோம்பு, பட்டை, அன்னாசிப்பூ- ஒரு டீஸ்பூன் பொடித்தது
உப்பு- தேவையான அளவு
நீர்- தேவையான அளவு
செய்முறை:  50 மில்லி கடலை எண்ணெயை சூடாக்கி அதை நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றின் கலவை மேல் ஊற்றவும். பத்து நிமிடத்திற்குப் பிறகு  கடலை மாவு, உப்பு மற்றும் வாசனைப் பொடி போட்டுக் கலந்து நீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும். கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மிதமான சூடு வந்ததும் அதில் மாவைக் கையில் அள்ளி, சின்னச்  சின்னதாக உதிர்த்து விடவும். பொன்னிறமானதும் எடுக்கவ்ம். எண்ணெய் அதிக சூடாக இருந்தால் , பக்கோடா உள்ளே வேகாது.’

(இது பழைய தமிழ் வார இதழிலிருந்து ...)

தடைப்பட்ட திருமணம் நிறைவேற !


தடைப்பட்ட திருமணம் நிறைவேற !

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் பட்டமங்கலம் என்ற சிற்றூரில் கிழக்கு நோக்கி திசை மாறி அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று காலை 108 முறை அவரை வளம் வந்து அர்ச்சனை அபிஷேகம் செய்ய நீண்ட நாள் தடைப்பட்ட திருமணங்கள் கூடி இனிது நிறைவேறும். 51  முறை அவரை வலம் வர நியாயமான கோரிக்கைகள், நினைத்த காரியங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்.


( நன்றி: கே.எஸ்.சேவுகமூர்த்தி, ஜோதிட அரசு)

Saturday, August 23, 2014

ஆய கலைகள் அறுபத்து நான்கு



1.
அக்கர இலக்கணம்-------- எழுத்திலக்கணம்

2.
லிகிதம் (இலிகிதம்) -------எழுத்தாற்றல்

3.
கணிதம் ------ கணிதவியல்

4.
வேதம் \------ மறை நூல்

5.
புராணம் -------தொன்மம்

6.
வியாகரணம்-------- இலக்கணவியல்

7.
நீதி சாஸ்திரம்------- நய நூல்

8.
சோதிடம் ------ கணியக் கலை

9.
தரும சாஸ்திரம் ------அறத்து பால்

10.
யோகம் ----- யோகக் கலை

11.
மந்திரம் -------மந்திரக் கலை

12.
சகுனம்------- நிமித்தக் கலை

13.
சிற்பம் -------கம்மியக் கலை

14.
வைத்தியம் -----மருத்துவக் கலை

15.
உருவ சாஸ்திரம்----- உருப்பமைவு

16.
இதிகாசம் ------மறவனப்பு

17.
காவியம் -----வனப்பு

18.
அலங்காரம் -----அணி இயல்

19.
மதுர பாடனம் ------இனிது மொழிதல்

20.
நாடகம் -----நாடகக் கலை

21.
நிருத்தம் ----ஆடற் கலை

22.
சத்த பிரமம் -----ஒலிநுட்ப அறிவு

23.
வீணை -----யாழ்இயல்

24.
வேனு -----குழலிசை

25.
மிருதங்கம் ------மத்தள நூல்

26.
தாளம் -----தாள இயல்

27.
அகத்திர பரீட்சை -----வில்லாற்றல்

28.
கனக பரீட்சை ------பொன் நோட்டம்

29.
இரத பரீட்சை----- தேர் பயிற்சி

30.
கஜ பரீட்சை ------யானையேற்றம்

31.
அசுவ பரீட்சை---- குதிரையேற்றம்

32.
இரத்தின பரீட்சை -----மணி நோட்டம்

33.
பூ பரீட்சை ------மண்ணியல்

34.
சங்கிராம -----இலக்கணம் போர்ப் பயிற்சி

35.
மல்யுத்தம் -----கைகலப்பு

36.
ஆகர்ஷணம்---- கவிர்ச்சியல்

37.
உச்சாடணம் ------ஓட்டுகை

38.
வித்து வேஷணம்----- நட்பு பிரிக்கை

39.
மதன சாஸ்திரம் -----மயக்குக் கலை

40.
மோகனம் ------புணருங் கலை (காம சாத்திரம்)

41.
வசீகரணம் -----வசியக் கலை

42.
இரசவாதம் -----இதளியக் கலை

43.
காந்தர்வ விவாதம் ----இன்னிசைப் பயிற்சி

44.
பைபீல வாதம் -----பிறவுயிர் மொழி

45.
தாது வாதம் -------நாடிப் பயிற்சி

46.
கெளுத்துக வாதம் --------மகிழுறுத்தம்

47.
காருடம் ------கலுழம்

48.
நட்டம் --------இழப்பறிகை

49.
முட்டி ---------மறைத்ததையறிதல்

50.
ஆகாய பிரவேசம் ----------வான்புகுதல்

51.
ஆகாய கமனம் --------வான் செல்கை

52.
பரகாயப் பிரவேசம் -------கூடுவிட்டு கூடுபாய்தல்

53.
அதிரிச்யம் ---------தன்னுறு கரத்தல்

54.
இந்திர ஜாலம் --------மாயம்

55.
மகேந்திர ஜாலம் --------பெருமாயம்

56.
அக்னி ஸ்தம்பம் அழற் கட்டு

57.
ஜல ஸ்தம்பம் --------நீர்க் கட்டு

58.
வாயு ஸ்தம்பம் --------வளிக் கட்டு

59.
திட்டி ஸ்தம்பம் ---------கண் கட்டு

60.
வாக்கு ஸ்தம்பம்----- நாவுக் கட்டு

61.
சுக்கில ஸ்தம்பம் ------விந்துக் கட்டு

62.
கன்ன ஸ்தம்பம் -------புதையற் கட்டு

63.
கட்க ஸ்தம்பம் ------வாட் கட்டு

64.
அவத்தை பிரயோகம்--------- சூனியம்