Tuesday, November 20, 2012


கூந்தல் வளர 

  1. அரை மூடி தேங்காயுடன், இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து அரைத்து , சாற்றை மட்டும் எடுத்துத் தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்னர் வழக்கமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலைக்குக் குளியுங்கள். இவ்வாறு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை குளிக்கலாம். வெறும் தேங்காய்ப்பாலை  தலைக்குத் தேய்த்து ஊற வைத்தும் குளிக்கலாம்.
  2. கற்றாழையின் நடுவில், கத்தியால் நீளமாக கீறினால் உள்ளே இருந்து கொழகொழப்பான சோற்றுப்பகுதி வரும். அதில், கையளவு வெந்தயத்தைப் போட்டு கற்றாழையை பழையபடி மூடி, நூலால் கட்டி விடவும். இரண்டு நாட்களில் , கற்றாழைசோற்றில் ஊறிய வெந்தயம் முளை விடும். அதனுடன் கற்றாழையையும் எடுத்து நன்றாக அரைத்து வடையாகத்தட்டி வெய்யிலில் உலர்த்தி , தேங்காய் எண்ணையில் போட்டு, ஊரைவிட்டு, தினமும், தலைக்குப்பூசி வர , முடி நன்றாக வளரும் மேலும் தலைக்கு ஆயில் மசாஜ் செய்யவும் பயன் படுத்தலாம்.
  3. புதினா இலைகளை சுத்தமான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் கிடைக்கும் டிகாஷனை தலைக்குப்பூசி , ஊற வைத்துக்குளிக்கலாம். இதே போல , செம்பருத்தி இலைகளை கொதி நீரில் போட்டு, டிகாஷனை எடுத்தும் குளிக்கலாம். செம்பருத்திப்பூவை, தேங்காய் எண்ணையில் ஊறப்போட்டு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.-நன்றி: தினமலர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.