Sunday, December 8, 2013

விளாம்பழத்தின் நன்மைகள்!




ரத்தத்தில் கலக்கும் நோய்கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டு. அஜீரணக் கோளாறை நீக்கி, பசியை உண்டு பண்ணும் ஆற்றலும் உண்டு. பல் உறுதியாக இருக்க விளாம்பழம் நல்ல மருந்து.


வெங்காயத்தின் சிறப்புகள்!

பச்சை வெங்காயத்திற்கு உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு.
இதன் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரையச்செய்து ரத்தத்தை சுத்தம் செய்கிறது. நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணம் செய்ய உதவுகிறது.

என்ன விலையை நினைத்தாலே கண்ணீர் வருகிறதா?!!! கவலை வேண்டாம், நல்ல காலம் பிறக்கும்!


முள்ளங்கிக் கீரை!




சிறுநீர்க் கற்களைக்கரைக்கவும், சிறுநீர்ப்பை வீக்கத்தை குறைக்கவும் தினமும் 30 மி.லி. முள்ளங்கிசாற்றைக் குடிக்க வேண்டும்.

கல்லீரல் நோய்கள் குணமாக, முள்ளங்கிச் சாற்றுடன் வெல்லம் கலந்து சாப்பிட வேண்டும்.
வெந்தயத்தை முள்ளங்கிச்சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.