வாஸ்துப்படி வீட்டு வாசல் அமைப்பது எப்படி?
வீட்டின் வாசற்படி அந்த வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் குடும்பத்தலைவரின் ஜாதகத்திற்கு ஏற்றவாறு அமைந்தால்தான் ஏற்றமான, வளமான வாழ்வு அமைந்து, வருமானமும் வந்து சேரும்.
கட்டிடத்தின் நிலை வைக்கும் நேரம் மிக முக்கியமானது. நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம், லக்னம் மற்றும் அரசு பட்சியும், ஹோரையும் சிறப்பாக அமைந்தால், வீடு கட்டியது முதல் வியக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்படும்.
கட்டப்போகும் வீட்டின் நீளத்தை அளந்து அதை 9 பங்கு செய்து வலது புறத்தில் 5 பங்கு ஒதுக்கி நடுப்பங்கில் வாசல் அமைத்தால் அந்த வீட்டில் அதிக சுப காரியங்கள் நடைபெறும் என்று கூறுவார்கள்.
அதைக் குறிக்கும் பழம் பாடல்:
" வீட்டினளவை விளங் கொன்பான் கூறு செய்து
நீட்டியளந்த நிலைக்கோல்- கூட்டிடுவாய்!
வாமத்தே யைத்தும், வலத்தே யொரு மூன்றாய்,
சோமத்தே வாசலிடச் செப்பு என்பதாகும்."
(நன்றி: தமிழ் மாத ஜோதிடம்).
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.