பக்கோடா தயாரிக்கும்
முறை
கடலை மாவு- ஒரு கிலோ
கடலை எண்ணெய் – 250 மில்லி
வெங்காயம்- 200 கிராம்
பச்சை மிளகாய்- 25 கிராம்
கறிவேப்பிலை,கொத்துமல்லி- தேவையான அளவு
சோம்பு, பட்டை, அன்னாசிப்பூ- ஒரு டீஸ்பூன் பொடித்தது
உப்பு- தேவையான அளவு
நீர்- தேவையான அளவு
செய்முறை: 50
மில்லி கடலை
எண்ணெயை சூடாக்கி அதை நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
கொத்துமல்லி ஆகியவற்றின் கலவை மேல் ஊற்றவும். பத்து நிமிடத்திற்குப் பிறகு கடலை மாவு, உப்பு மற்றும் வாசனைப் பொடி
போட்டுக் கலந்து நீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும். கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடாக்கி, மிதமான சூடு வந்ததும் அதில் மாவைக் கையில் அள்ளி, சின்னச் சின்னதாக உதிர்த்து விடவும். பொன்னிறமானதும்
எடுக்கவ்ம். எண்ணெய் அதிக சூடாக இருந்தால் , பக்கோடா உள்ளே வேகாது.’
(இது பழைய தமிழ் வார
இதழிலிருந்து ...)