சாம்பல் பூசணியை தினசரி உபயோகிக்க
வயிற்றுப்புண், மலச்சிக்கல் ஆகியவை மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும்
இரத்தப்போக்கை குணமாக்கும். வலிப்பு நோய், மற்றும் மன நோய்களுக்கும் நல்லது.
இதன்
சாற்றை இரவில் சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்த நல்ல தூக்கம் வரும். தினசரி
இதன் சாற்றை 15 மில்லி அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
பூசணிச் சாறு
அல்லது கறி ஆகியவை உடலுக்கு டானிக்.
பூசணி
லேகியம் மற்றும் ரசாயனம், அஜீரணம், மலச்சிக்கல், மூல வியாதி, ஆஸ்த்மா, நீரிழிவு
நோய், இருமல் ஆகியவற்றைப் போக்கக் கூடியது ஆகும்.
இதன் இலைகளை கறி சமைத்துச் சாப்பிட மசக்கை வாந்தி நிற்கும்.
சிறுநீர் வெளியாவதில் சிரமம் இருப்பின்
சாம்பல் பூசணிச் சாறு எடுத்து அதனுடன் மண்டை வெல்லத்தூள் மற்றும் உப்பு கலந்து
அருந்த குணமாகும்.
பூசணிச் சாற்றை பாலுடன் கலந்து கொதிக்க வைத்து அருந்தினாலும்
நல்ல பலன் தரும்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக இரத்தப் போக்கு
ஏற்பட்டால் பூசணி இலைச் சாற்றுடன் சர்க்கரை கலந்து தினமும் அதிகாலை அருந்த
குணமாகும்.
சாம்பல் பூசணியின் தண்டைக் காய வைத்து
சாம்பலாக்கி கோமியத்துட கலந்து தோல் வியாதியின் மீது தடவ குணமாகும்.பாதத்தில்
வரும் புண்ணிற்கு நல்லது.
சாம்பல் பூசணித் துண்டு கொண்டு முகத்தில்
பல முறை தினசரி தடவி வர முகம் புதுப் பொலிவு பெரும். வடுக்கள் , கரும் புள்ளிகள்
மறையும்.
சாம்பல் பூசணிச் சாற்றுடன் கேரட் சாறு
கலந்து பருக இளமையில் முடி உதிர்தல் நின்று,கேசம் வலுப்பெறும்.
பூசணி இலைச் சாற்றை மோருடன் கலந்து அருந்த
வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி குணமாகும்.
பூசணி விதைகளைப் பொடித்து ஆறு கிராம் அளவு
,வெந்நீருடன் உட்கொள்ள குடல் புழுக்கள் மடியும். சர்க்கரையுடன் இதன் பொடியை
உட்கொள்ள நாடாப் புழுக்கள் அழியும்.
(நன்றி: யுனானி மருத்துவம்)