Sunday, February 22, 2015

வரகு அரிசி புலாவ்

வரகு அரிசி புலாவ் 




வரகு அரிசி- 1 கப்
பட்டை- 1
கிராம்பு-4
பிரியாணி இலை -1
பச்சை மிளகாய்-2
சோம்பு - 1 ஸ்பூன்
புதினா - 10-13 இலைகள்
உப்பு- தேவைக்கேற்ப
தண்ணீர்- 1 1/2 கப்
நெய்/என்னை - 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய காய்கறிகள் - 1 கப் ( காரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிப்ளவர் )
வெங்காயம் - நீளமாக நறுக்கியது
இஞ்சி-பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்

வரகு அரிசியை தண்ணீரில் களைந்து வைக்கவும். பின் குக்கரில்  நெய்யை சூடாக்கி பட்டை, சோம்பு, கிராம்பு, பிரியாணி இலை  ஆகியவற்றை வதக்கவும். பின் வெங்காயத்தை பிரவுன் ஆகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மற்றும் பச்சை மிளகாய், புதினா போட்டு வதக்கவும். பின் இத்துடன் காய்கறிகளையும், உப்பும்  போட்டு வதக்கி , 1 1/2 கப் தண்ணீர்  விட்டு கொதி வந்தவுடன் , களைந்து வைத்த வரகு அரிசியைப் போட்டு, குக்கரை மூடி , 12 நிமிடங்கள் மிதமான  தீயில் வேக வைக்கவும். (விசில் தேவையில்லை. விசில் வைக்க வேண்டுமானால், 1 விசில் வந்தவுடன் அணைக்கவும்). வெந்த பிறகு, கொத்துமல்லித் தழை போட்டு அலங்கரித்து, வெங்காய ரைத்தாவுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.