Sunday, February 22, 2015

கல்யாண ரசம்

கல்யாண ரசம் 
தேவையான பொருள்கள்:



 


தக்காளி -2
நெய்- 2 டீஸ்பூன்
மிளகு- 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
 சீரகம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்- 3
கடுகு-1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
பெருங்காயம்- 1 சிட்டிகை
துவரம் பருப்பு - 1 1/4 கப் (வேக வைத்தது)
கொத்துமல்லி - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்

1/2 தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக்  கொள்ளவும். 1 1/2 தக்காளியை வெந்நீரில் போட்டு, தோல் உரித்து பிறகு அரைத்துக் கொள்ளவும்.
 1 ஸ்பூன் நெய்யில் மிளகு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்துக்கொண்டு, கடைசியில் சீரகம் போட்டு வறுத்துக் கொண்டு, தேங்காய் சேர்த்து வதக்கி, ஆற வைத்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். பிறகு இந்த பேஸ்டுடன், மஞ்சள் பொடி ,நறுக்கிய தக்காளி போட்டு, அரைத்த தக்காளியும் , உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பின் , துவரம் பருப்பு சேர்த்து, நுரைத்து வந்ததும்  இறக்கி வைத்து, மீதமுள்ள நெய்யில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டவும்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.