Sunday, January 10, 2016

மருத்துவக் குறிப்புகள் !



மிளகின் மகத்துவம்

பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் உண்ணலாம் என்பது முன்னோர் வாக்கு. இது மிளகின் விஷம் முறிக்கும் தன்மையை குறிக்கும்.
காய்கறி போன்றவற்றை நறுக்கும் போது கையை நறுக்கிக் கொண்டால் காயத்தை குளிர்ந்த நீரில் சோப்பு போட்டு கழுவிய பிறகு மிளகுத்தூளைத் தூவி லேசாக அழுத்தம் கொடுக்க ரத்தப் போக்கு நிற்கும். மேலும் வலி நிவாரணத்திற்கும், புண் செப்டிக் ஆகாமல் இருக்க கிருமிநாசினியாக உதவும்.
மிளகை வாயில் அடக்கி மென்று உமிழ்நீரை விழுங்கினால் வறட்டு இருமல் நிற்கும். தொண்டைப் புண் குணமாகும்.




சோயா
சோயா கொலஸ்டராலைக் குறைக்கிறது. இருதய நோயைத் தடுக்கிறது. எலும்புத் தேய்மானத்தையும் சர்க்கரை வியாதியையும் கூடத் தடுக்கும், பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் அவதி குறையும். சோயா சாப்பிடுவதால் மார்பகப் புற்று நோயிலிருந்தும் காக்கும் என்கின்றன ஆய்வுகள். தோல் சுருக்கத்தையும் தடுத்து தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.




சுக்கு
ஒரு துண்டு சுக்கை வாயில் அடக்கிக் கொண்டால் குளிர் பறந்து விடும். இது இந்தப் பனிக்காலத்தில் அதிகாலையில் வேலைக்குச் செல்வோருக்கு உதவும்.



ஜின்செங்-சீன மூலிகை
ஜின்செங் நீண்ட நேரம் சோர்வில்லாமல் விளையாடும் ஆற்றலைத் தருகிறது. அட்ரீனல் சுரப்பிக்கு புத்துயிரூட்டும். கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும், உறுதியான சிந்தனையையும் இது கொடுக்கும். அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கேரட்
பெண்கள் தினசரி நான்கு கேரட் வீதம் வாரத்திற்கு குறைந்தது ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர சினைப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாகக் குறையும்.தக்காளி, ஆரஞ்சு, பேரிக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, முலாம்பழம், பூசணி ஆகியவற்றில் பீட்டா கரோடின் அதிகம் உள்ளதால் இவற்றிற்கும் அதே சக்தி உண்டு.


தெரியுமா?....ஒவ்வாமை உண்டாக்கும் உணவுகளின் சேர்க்கை !
புளிப்பும் காரமும் நட்பு. காரம் அதிகமாவதால் உண்டாகும் பாதிப்புக்கு மற்ற ஐந்து சுவைகள் உள்ள உணவை உட்கொண்டால் சரியாகி விடும்.
தேனும், நெய்யும் சம அளவு சேர்ந்தால் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
புளிப்பு சுவையுள்ள எந்த கனியுடனும் பாலை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
கேழ்வரகு, கொள்ளு மற்றும் காட்டுப் பயறு வகைகளுடன் பால் சேர்க்ககூடாது.
முள்ளங்கி மற்றும் கீரை சாப்பிட்டவுடன் பால் குடிக்கக் கூடாது.
முள்ளங்கியை உளுத்தம் பருப்போடும், கிச்சிலிப் பழத்தை உளுத்தம் பருப்பு, வெள்ளம், பால் , தயிர் , நெய் ஆகியவற்றோடு உட்கொள்ளக் கூடாது.
மணத்தக்காளியை மிளகு, திப்பிலி, தேன், வெல்லம் இவற்றில் ஏதாவதொன்றுடன் சேர்த்து உபயோகிப்பது விஷமாகும்


மாம்பழம்


ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் ஒரு நாளுக்குத் தேவையான பீட்டா கரோடீன் மற்றும் வைட்டமின் சி கிடைத்து விடுகிறது.
(நன்றி: யுனானி மருத்துவம்)

Sunday, December 27, 2015

ஹோமியோபதி மற்றும் உடல் நலக் குறிப்புகள் !



ஞாபக சக்திக்கு பொட்டாஷியம் சத்து முக்கியம். இது வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது. வாழைப்பழம் சாப்பிட்டால் ஞாபக சக்திக்கும், மலச்சிக்கல் இல்லாமல் இருக்கவும் உதவும்.

கலப்பட குங்குமம் மற்றும் விபூதி ஆகியவற்றால் நெற்றியில் ஏற்பட்ட வடுவிற்கு காந்தரிஸ் ஆயின்ட்மென்ட்டும், உள்ளிற்கு சாப்பிட காஸ்டிகம் என்னும் ஹோமியோபதி மருந்துகளும் உபயோகித்தால், வடு மறைந்து மீண்டும் தோல் பழைய நிலைமைக்கு மாறும். காந்தரிஸ் தீக்காயங்களுக்கும் சிறந்த மருந்து.
முட்டையினால் ஏற்படும் ஒவ்வாமைக்கு ஹோமியோபதி மருந்து : ஃ பெரம் மெட் (ferrum met).
தினமும் வாழை இலையில் சாப்பிட்டால் இளமை நீடித்து நிலைக்கும்.
நாவற்பழம், பாகற்காய் மற்றும் வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
உணவில் புளிக்கு பதிலாக எலுமிச்சம்பழச் சாறு சேர்ப்பது நல்லது..
வறுத்த மாமிச உணவு வகைகளை அதிகமாக உண்பவர்கள் அப்பழக்கத்திலிருந்து மாற ஹோமியோபதி மருந்து நைட்ரிக் ஆசிட் (Nitric acid) துணை புரியும்.

மெட்ராஸ் ஐ  குணமாக அற்புதமான ஹோமியோபதி மருந்து பெல்லடோனா (Belladona).
கண்ணில் அடிபட்டவுடன் வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த ஹோமியோபதி மருந்து : சிம்ஃபைடம் (Symphytum).
தொடர்ந்து தொலைகாட்சி பார்த்தல், கணினியில் வேலை செய்தல், சிறிய எழுத்துகளைப் படித்தல் ஆகியவற்றால் ஏற்படும் கண் வலிக்கு (Eye strain) ரூடா (Ruta) எனும் ஹோமியோபதி மருந்து நல்லது.( ஹோமியோபதிச் சுடர் ).

Thursday, December 24, 2015

உணவு மற்றும் மூலிகை மருத்துவம்



துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபக சக்திக்குறைவு, ஆஸ்த்மா இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாற்றில் தேன் மற்றும் இஞ்சிச்சாறு கலந்து கொடுத்தால் சளி இருமல் ஆகியவை குணமாகும்.

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடம்பு வலியோ, செரிமானக் கோளாறோ ஏற்படாது. வயதானவர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு  பசியில்லை என்று சொன்னால் இஞ்சி சேர்த்துக் கொண்டால் நல்ல பசி எடுக்கும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை தினமும் சாப்பிட்டால் கல்லீரல் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.(ஹோமியோபதிச் சுடர் )

சாம்பார் மற்றும் ரசம்



சாம்பார் மற்றும் ரசத்தில் சேரும் புளியில் வைட்டமின் இ , வைட்டமின் சி,டார்டாரிக் அமிலம் ,கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. டார்டாரிக் அமிலம் உடலில் சேரும் அதிக அளவு மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. காய்ச்சல், ஜலதோஷம் முதலியன ஏற்பட்டால் மிளகு, பூண்டு, புளி சேர்ந்த ரசம் தவறாமல் ஒரு குவளையாவது அருந்தினால் நல்லது. தினமும் சாப்பாட்டில் சாம்பார் இடம் பெறின் நல்லது.

HOMEOPATHIC REMEDIES FOR COMMON AILMENTS



HOMOEOPATHIC REMEDIES FOR COMMON AILMENTS:
Itching due to Prickly heat: NAT MUR
Itching due to coconut oil:  SULPHUR
Hypertension due to mental stress, anxiety , tension etc: Aur met

Thursday, June 11, 2015

ACUPRESSURE FOR HEALTH PROBLEMS IN MEN AND WOMEN! ஆண்கள், மற்றும் பெண்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு அகுப்பிரஷர்!

ACUPRESSURE FOR HEALTH PROBLEMS IN MEN AND WOMEN!
ஆண்கள், மற்றும் பெண்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு அகுப்பிரஷர்!

Application of pressure using finger or blunt instruments(pen, pencil) for 1-3 minutes in the point indicated in red color will be useful for the following:
1. Gynecological problems in women
2. Impotence, Spermatorrhoea, Premature ejaculation in men.
3. Edema (Pedal or ascites etc) due to anuria, dysuria or oliguria.

கொடுத்துள்ள படத்தில் சிவப்பு வண்ணத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளியில் 1-3 நிமிடம் வரை கைவிரலால் அல்லது பேனா, பென்சிலின் கூர்மை இல்லாத முனையால் அழுத்தம் கொடுக்க கீழ்க்கண்ட நோய்கள் குணமாகும்.
1.  பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள்
2.  ஆண்களின் ஆண்மைக்குறைவு , துரித ஸ்கலிதம்,
3. உடலில் நீர்க்கோர்வையால் வீக்கம் (கால், வயிறு போன்ற பாகங்களில் )- குறிப்பாக சிறுநீர் சரியாக வெளியேறாததால் ஏற்படும்போது .



PREDICTION USING THUMB!

THUMB IN PALMISTRY

If you have a line resembling 'wheat grain' at the junction of the first and second phalange of the thumb, you will never have scarcity for food in your life.
கை கட்டை விரலில் முதல் அங்குலாஸ்தி மற்றும் இரண்டாம் அன்குலாஸ்திக்கு இடையில் 'கோதுமை' போன்ற ரேகை இருந்தால் வாழ் நாள் முழுவதும் சாப்பாட்டிற்கு கஷ்டம் வராது.