உள்ளூரில் திருமணம் அமையும் வாய்ப்பு!
ஜாதகத்தில் ஏழாமிடம் ஸ்திரமான ராசியாக இருந்து, அதில் ஸ்திர கிரகங்கள் வீற்றிருந்தால் உள்ளூரிலேயே வரன் அமையும்!
கட்டளையிடும் யோகம் யாருக்கு அமையும்!
சந்திரன் முழு மதியாக மீன ராசியில் இருந்து சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட வேளையில் பிரிந்த ஜாதகருக்கு அரசியலில் செல்வாக்கும், உயர் பதவியும், இவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேலையாட்களும் அமைந்து அரசனைப் போல வாழவார்கள்.
ஆவணி மாதம், சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது ஞாயிற்றுக்கிழமை அன்று சூரியனுக்குப் பொங்கல் இட்டு வழிபாடு செய்தால் மகிழ்ச்சி பொங்கும். செல்வம், செல்வாக்கு பெருகும். எல்லா ஞாயிற்றுக் கிழமையும் முடியா விட்டாலும், கடைசி ஞாயிறு அன்று விரதமிருந்து பொங்கல் இடுவது நல்லது.
சூரிய கிரணங்களை வழிபட்டால் காரியங்கள் வெற்றிபெறும்.
ஆவணி மாதம்!
பிட்டுக்கு மண் சுமந்து பரமன் பிரம்படி பட்ட திருவிளையாடல் நடந்த மாதம் ஆவணி மாதம். இந்த தினம் மதுரை ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். அதில் கலந்து கொள்பவர்கள் சகல பாக்கியங்களையும் பெறுவார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கீழச்சீவல்பட்டி ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அன்றைய தினம் சிவபெருமான் தலையில் வெள்ளிக்கூடயையும், மண் வெட்டியையும் வைத்து புட்டுக்கு மண் சுமந்து வருவது போல நகரத்தார் பெருமக்கள் மிகச் சிறப்பாக விழாக் கொண்டாடுகிறார்கள்.
மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களும், ஆண்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு முறையாக இறைவனை வழிபாடு செய்தால் காலம் முழுவதும் காத்திருந்தும் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை தீரும். அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று ஆவணி மூலத்தன்று சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் தீர்ந்து கனிவான வாழ்க்கை அமையும்!.