Sunday, November 10, 2013


  • பாதுஷா செய்ய!

சர்க்கரையை இரட்டைக் கம்பிப் பாகு வரும் வரை காய்ச்சியதும், அரை மூடி எலுமிச்சம் பழச் சாற்றைப் பிழிந்து விட்டால் பாகு திரவ நிலையிலேயே இருக்கும். பாதுஷாக்களை பொறித்த பிறகு இந்தப் பாகில் ஊற வைக்கலாம்!


  • முத்து முத்தான பூந்திக்கு!

  • கடலை மாவில் ஒரு ஸ்பூன் வெது வெதுப்பான நெய் அல்லது எண்ணெய்யை கலந்து பூந்திக்கு மாவு கலந்து, தேய்த்தால் பூந்தி முத்து முத்தாக வரும்.
  • பூந்தி தேய்க்கும் கரண்டியில் முதலில் சிறிதளவு எண்ணெய்யை நன்றாகத் தடவி விட்டு, மாவை சிறு கரண்டியால் எடுத்து விட்டு, லேசாகத் தட்டினால் முத்து முத்தாக வரும்!
  • பூந்தியில் வால் வாலாக வராமல் இருக்க, ஒவ்வொரு முறை தேய்த்த பின்னர், கரண்டியின் அடிப்பாகத்தில் ஒட்டியுள்ள மாவை ஈரத்துணியால் துடைத்து எடுத்து விட்டு, பின்னர் தேய்க்க வேண்டும்!( நன்றி: கோகுலம் கதிர்).

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.