கைரேகை என்ன சொல்கிறது- 1
புத்தி
ரேகை!
புத்தி
ரேகை ஒருவர் கையில் நன்றாக இருந்தால் அவர் பலசாலியாகவும், திறமைசாலியாகவும்
இருப்பார். புத்தி ரேகை சரியாக அமையாதவர் கையில் இருப்பதை இழந்து தவிக்க நேரிடும்.
புத்தி
ரேகை கையில் குரு மேட்டின் அடியில் உற்பத்தியாகிறது.
ஆயுள்
ரேகை தொடங்கும் இடத்தில் புத்தி ரேகை உற்பத்தி ஆவதும் உண்டு.
இந்த
ரேகை குருமேட்டுக்கு அடியில் உற்பத்தியாகி சந்திர மேடு, செவ்வாய் மேடு நோக்கிச்
செல்வதும் உண்டு.
புத்தி
ரேகை கையின் நடுப்பாகத்தில் நின்று கையை இரண்டு பாகங்களாகப் பிரித்துக்
காண்பிப்பதும் உண்டு. இது மாதிரி அமைந்தவர்கள் அதிக புத்தி சாலியாகத் திகழ்வார்.
இவரை யாரும் ஏமாற்ற முடியாது.
புத்தி
ரேகையிலிருந்து சிறு சிறு ரேகைகள் குரு மேட்டை நோக்கிச் சென்றால், மிக அதிக புத்தி
சாலியாகத் திகழ்வார்.
புத்தி
ரேகை, ஆயுள் ரேகை இணையாமல் தனித்தனியாக அமைந்தவர் எந்த காரியத்தையும் தன்னிச்சையாக
செய்து வெற்றி பெறுவார். பெண்களுக்கு இந்த அமைப்பு நல்லது அல்ல.
புத்தி
ரேகையிலிருந்து ஒரு கிளை உற்பத்தியாகி அது குரு மேட்டைத் தொட்டால் அவர் ஒரு சிறந்த
எழுத்தாளராகத் திகழ்வார்.
புத்தி
ரேகை கையின் நடுப்பாகம் வரை அடைந்து பின் சற்று கீழ்நோக்கி தென்பட்டால் அவர் பணம்
சேர்ப்பதில் மிகவும் ஆசையுடன் திகழ்வார்.
புத்தி
ரேகை நேராக அமைந்து இறுதி நுனி இருதய ரேகையை நோக்கி மேல் சென்று தொடுமானால் அவர்
பல பெண்களுடன் தொடர்புள்ளவராக இருப்பார்.
புத்தி
ரேகைக்கு மேல் சூர்ய ரேகை பலமாக அமைந்தால், ஏதாவது கலையில் பெயரும் புகழும்
அடைவார். புத்தி ரேகை, சனிமேட்டுக்கும், குரு மேட்டுக்கும் இடைப்பகுதியில்
உற்பத்தி ஆனால் உடம்பில் ரத்தம் குறைந்து காணப்படுவார்.
புத்தி
ரேகையில் தீவுக்குறி தென்பட்டால் அவருக்கு வாய்க் குளறல், திக்கு வாய் இருக்க
வாய்ப்பு உண்டு.
பெருவிரல்
பக்கம் மிக அருகில் புத்தி ரேகை உள்ளவர்க்கு ஆயுள் தீர்க்கம் இல்லை.
புத்தி
ரேகை சனி மேட்டின் கீழ் அல்லது சூரிய மேட்டின் கீழ் ஒதிந்து தென்பட்டால் அவருக்கு
மிருகங்களால் ஆபத்து உண்டாகும்.
புத்தி
ரேகை சந்திர மேட்டை நோக்கிச் சென்றால் கடல் பயணம் உண்டு.
இரண்டு
புத்தி ரேகை அமைந்தவர் மிகப்பெரிய அதிர்ஷ்ட சாலி. அவர் பெரும் பதவியை அடைவார்.
புத்தி
ரேகையும், இருதய ரேகையும் ஒன்றை ஒன்று தொடக்கூடாது.
சுக்ரமேட்டில்
இருந்து ஒரு கிளை ரேகை புத்தி ரேகையைத் தொட அவருக்கு கடுமையான குடும்பப் பிரச்சினைகள்
உண்டாகும். அதிக நீளமான புத்தி ரேகை அமைந்து சந்திர மேடு வரை சென்றால் அவர்
பிறரின் மனதை அறியும் திறன் உள்ளவராக இருப்பார். இதை ‘அந்தர் திருஷ்டி யோகம்’
என்பார்கள்.
புத்தி
ரேகையில் கிராஸ் குறி அமைந்திருந்தால் அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர். அவர் என்ன
செய்கிறார் என்று அவருக்கே தெரியாது.