Sunday, November 10, 2013


வீட்டு குறிப்புகள்!
  • காய்கறிகளை   பிரிட்ஜில் வைக்கும்போது தனித்தனி பைகளில் பிரித்து வைத்தால் நல்லது. ஒரு காயில் இருக்கும் புழு, மற்றும் பூச்சிகள் மற்ற காய்களுக்கு செல்லாமல் இருக்கும்.
  • தோசை மாவு புளித்து விட்டால் அதில் பாதி அளவு ரவை, பாதி அளவு கோதுமை மாவு சேர்த்து, உப்பு, மற்றும் தண்ணீர் கலந்து தோசை வார்த்தால் புளிப்பில்லாத தோசை ரெடி!.
  • கொழுக்கட்டை, சோமாசி மற்றும் போளிக்கு பூரணம் செய்ய வறுத்த வேர்க்கடலை ஒரு கப், பொடித்த வெல்லம் அரை கப், பொடித்த ஏலக்காய் நான்கைந்து,ஆகியவற்றை மிக்ஸியில் போடி செய்து உபயோகிக்கலாம்! இது வேர்க்கடலை பூரணம்!
(நன்றி: கனகம் பொன்னுசாமி, கோவை; மங்களம் சுவாமிநாதன், பெங்களுரு, கே. ஹேமமாலினி, மணப்பாறை.- அவள் விகடன்).

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.